தன்னார்வலர்கள்
ஆதியிலிருந்து மற்ற உயிரினங்களைப் போலவே மனிதனும் இயற்கையைச் சார்ந்தும், இயற்கையிடம் பல்வேறு பயன்கள் பெற்றும் வாழ்ந்து வந்தான். சில தலைமுறைகளுக்கு முன்பு வரை, இயற்கையுடன் ஒன்றியும், போற்றியும், பேணிக்காத்தும் வாழ்ந்து வந்த மனிதனின் வாழ்வில், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் தாக்கத்தால் இயற்கையின் முக்கியத்துவம் உணராவண்ணம் அதன் மீதான கண்ணோட்டம் மாறத்துவங்கியது .
மனிதன் இயற்கையை உதாசீனப்படுத்துவதில் துவங்கி இயற்கையின் மேல் கேடு விளைவிக்கும் செயல்கள் வரை பல அழிவுகளுக்கும் காரணமானான் . இப்போக்கு மற்ற உயிரினங்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதோடு சக இனத்தையும் அழிவின் விளிம்பிற்கு கொண்டுச் சென்றது. தொழில் மயமாக்கல், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்தல் போன்றவற்றால் நகரங்கள் நீர் பற்றாக்குறையில் சிக்கித் தவித்தன. இதில் நீர்நிலைகள் மாசடைவதைத் தொடர்ந்து , காற்று, உணவு என பல அத்தியாவசியமான இயற்கையின் படைப்புகளும் அவற்றின் தரத்தில் நலிவடைந்தன. தனி மனித அக்கறையின்மை மற்றும் அலட்சியம் காரணமாக நிலமை மேன்மேலும் மோசமடைந்தது. இது பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த பலவீனமான வளர்ச்சி மற்றும் அலட்சியப்போக்கினால் எதிர்காலத்தில் பல இந்திய நகரங்கள் தண்ணீரில்லாமல் போய்விடும் என்று அரசுத் துறையான நிதி ஆயோக் எச்சரித்துள்ளது.
மனிதர்களாகிய நாம் இயற்கையின் வளங்களை நம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இது எல்லா மட்டங்களிலும் இயற்கை மாசுபடுவதற்கு வழிவகுத்தது. இந்நிலமையை சரி செய்வது அரசு மட்டுமன்றி ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகும். இந்த சூழ்நிலையை மீட்டெடுப்பதும் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பதும் நம் பொறுப்புதானே??
தன்னார்வத் தொண்டுக்கான வழிகள்
நீர்நிலைகளை மீட்டெடுத்து, புத்துயிரளிக்கும் எங்கள் முயற்சியில் நீங்களும் பங்கேற்க பல வழிகள் உள்ளன.
களப்பணிகளில் பங்கேற்பது:
- ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.00 மணி முதல் காலை 9.30 மணி வரை நாங்கள் ஏற்பாடு செய்து நடத்தும் களப்பணியில் எங்கள் குழுவுடன் சேர தன்னார்வலர்களை வரவேற்கிறோம். (தொடர்புக்கு: 9566538905)
- ஒவ்வொரு களப்பணியின் முடிவிலும், இயற்கையை மீட்டெடுப்பதற்கு பங்கு வகித்ததர்க்கான மகத்தான திருப்தியை நீங்கள் உணர்வீர்கள்.
- இரண்டாவதாக, நாம் செய்யும் இச்செயல் வருங்கால தலைமுறைக்கு மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு அகமகிழ்ச்சியைத்தரும்.
குளங்கள், ஏரிகள் மற்றும் கால்வாய்களை மீட்டெடுப்பதில் தொழில்நுட்ப ஆதரவு தேவை.
புதிய கால்வாய்கள் கட்டுதல் / சரிசெய்தல், தடுப்பணைகள் போன்றவற்றில் கட்டிட பொறியியல் உதவி.
இருக்கும் கட்டமைப்பிற்கு இடையூறு விளைவிக்காமல் கால்வாய்களில் உள்ள அடைப்பை அகற்ற உதவி.
- நீர்நிலை காக்கும் வண்ணம் அதனைச் சார்ந்த சட்ட திருத்தங்கள், அரசு கொள்கைகள் பற்றிய ஆலோசனை – ஆக்கரமிப்புகள் போன்ற செயல்களை சட்ட ரீதியாக சந்திக்க உதவி தேவை.
கடந்த 196 வாரங்களுக்கு மேலாக நகரத்திலுள்ள நீர்நிலைகள் சுத்தப்படுத்தி காக்கும் பணியிலும், பல்லுயிர் பெருக்கத்துக்காகவும் முழு முயற்சியுடன் பணியாற்றி வருகிறோம். எங்கள் பணி தொடர உங்கள் ஆதரவும், எவ்வகையிலான பொருளாதார உதவியும் தேவை.
எங்களை ஆதரியுங்கள்
