Skip to content

Kovai Kulangal Padhukappu Amaippu

கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களை ஈர்த்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும்,தேவைக்கேற்ப வாரத்தின் பிற நாட்களிலும் களப்பணியாற்றி வருகிறோம். இதுவரை தொடர்ந்து வார வாரங்கள், நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு ஏற்படுதுதல் மற்றும் ஏரி, குளக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது போன்ற பல பணிகளை செய்து வருகிறோம். கோவையில் இதுவரை 5 ஏரி, குளங்களை சுத்தம் செய்துள்ளோம். மியாவாக்கி முறையில் 4500 மரங்களை நட்டு அடர்வனக்காடுகளை உருவாக்கியுள்ளோம். நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதற்கான பல முயற்சிகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தை சுற்றிலும் 1,32,000 பனை மர விதைகளை நடவு செய்துள்ளோம்.

எதிர்கால நோக்கம் / குறிக்கோள்

எதிர்கால நோக்கம்

எதிர்கால நோக்கம்

பசுமையான எதிர்காலத்திற்காக நீராதாரங்களை புதுப்பித்தல்" (2025 ஆம் ஆண்டிற்குள், மண்ணின் ஈர தன்மையை அதிகரிக்க, பழைய நீர் நிலைகளான ஏரிகள், குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து அதனை புதுப்பித்தல், புதிய நீர் ஆதாரங்களை தொழில்நுட்ப உதவியுடன் கட்டமைத்தல் மற்றும் பசுமை பரப்பளவை அதிகரிப்பதற்கு தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்)

குறிக்கோள்

குறிக்கோள்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய குறிக்கோள் அன்னை நொய்யலையும், அதன் நீர்நிலைகளையும் பாதுகாப்பதாகும். நகரத்தில் உள்ள மக்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவது.

வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றுவது

(நமது அமைப்பில் பல துறைகளைச் சார்ந்த தன்னார்வலர்களான அரசு, அரசு அதிகாரிகள், நன்கொடையாளர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள், தனியார் நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரின் ஆதரவுடன் சுமார் 15 வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட வெள்ளலூர் குளத்தை மீட்டெடுத்துள்ளோம், இந்த குளத்தை ஒரு முன்மாதிரி குளமாக மாற்றுவது தான் எங்கள் நோக்கம்)

“நொய்யல் நதி மற்றும் அதன் வழித் தடங்களை சீரமைப்பது”
“நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது”
“அடுத்த தலைமுறைக்கு சுத்தமான குடிநீர் ஆதாரங்களை உருவாக்குவது”
செயல்பாடுகள்:

கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களை ஈர்த்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும்,தேவைக்கேற்ப வாரத்தின் பிற நாட்களிலும் களப்பணியாற்றி வருகிறோம். இதுவரை தொடர்ந்து வார வாரங்கள், நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு ஏற்படுதுதல் மற்றும் ஏரி, குளக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது போன்ற பல பணிகளை செய்து வருகிறோம். கோவையில் இதுவரை 5 ஏரி, குளங்களை சுத்தம் செய்துள்ளோம். மியாவாக்கி முறையில் 6000 மரங்களை நட்டு அடர்வனக்காடுகளை உருவாக்கியுள்ளோம். மேலும் 1000 மூலிகை மற்றும் மலர் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதற்கான பல முயற்சிகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தை சுற்றிலும் 1,36,000 பனை மர விதைகளை நடவு செய்துள்ளோம்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அணியுடன் எனது பங்கு :

என் பெயர் மணிகண்டன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பில் வாராவாரம் நடக்கும் களப்பணியை ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 2 மணிநேரம் நமது தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, பொதுமக்களுக்கு நீர்நிலைகள் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறேன் .

ஒவ்வொரு வாரமும் தன்னார்வலர்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, அதற்கான தக்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்கிறோம்.

இதுவரை செய்யப்பட்ட முக்கிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள்

நாம் செய்யும் பணிகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு, நாம் செய்யும் வேலையிலிருந்து அதற்கான அறிவைப் பெறுவதும் முக்கியம். உண்மையில், நாம் முன்னேறும் பாதையில் கவனம் செலுத்திட அது உதவும். அதற்காக, கோவையின் தடுப்பணைகள் முழுதையும் பார்வையிட ஒரு வாகன விழிப்புணர்வு பேரணி செய்ய திட்டமிட்டோம். எங்கள் நகரத்திலும், அதைச் சுற்றியும் 19 தடுப்பணைகள் உள்ளன. எங்கள் தன்னார்வலர்களின் ஆதரவுடன் நாங்கள் பொதுமக்களையும் மாணவர்களையும் திரட்டி அந்தந்த அணையின் விவரங்களைப் பொதுமக்களுக்கு பகிர்ந்துகொண்டு எங்கள் பேரணியைத் தொடங்கினோம்.

நீர்நிலைகளை காக்க, அவசர தேவை என்று கருதி இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நபரை அழைத்து வந்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தோம். அவர் “இந்தியாவின் வாட்டர்மேன்” என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங் ஆவார். இந்திய மாநிலமான ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த, நன்கு அறியப்பட்ட நீர் பாதுகாப்பு நிபுணர். இவர், நீர் சேகரிப்பு மற்றும் நீர் நிர்வாகத்தில் சமூக அடிப்படையிலான முயற்சிகளில் தனது முன்னோடி பணிக்காக 2001 ஆம் ஆண்டில் சமூகத் தலைமைத்துவத்திற்கான “ரமோன் மாக்சேசே” விருதை வென்றார். அவரது ஆலோசனையும் அனுபவமும் தொழில்நுட்ப பக்கத்தில் எங்கள் அணிக்கு உதவுகின்றன.

கோவை நகரத்தில் பசுமை பரப்பை குறுகிய காலத்திற்குள் அதிகரிக்கவும், நகரம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டத்தை மீட்டெடுப்பதிலும் நாங்கள் இப்போது கவனம் செலுத்துகிறோம். அதற்காக, குளத்தை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி நீர்வரும் பாதைகளை செப்பனிட்டுள்ளோம். குளத்தை சுற்றிலும் மியாவாக்கி என்னும் அடர்வன மரவளர்ப்பு முறையில் 6000 மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம். மேலும் 1000 மூலிகை செடிகளையும் வளர்த்துள்ளோம். எங்களுடைய குறிக்கோள் குளத்தை சுற்றிலும் 16000 மரங்களை நடவேண்டும் என்பதே. இதன் பயனாக 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளம் முழுவதுமாக நிரம்பி தற்போது பறவைகள் சரணாலயமாக மாறி வருகின்றது.

நொய்யலின் கதை

Noyyal needs us

As, how mothers’ breast milk is important to a baby, Mother nature’s water is important for all forms of life. Due to modernization our water bodies are polluted heavily, and as a polluter we have the responsibility to prevent it and revamp them. Though the government is making efforts, nothing is possible without the participation of the public. That's why we have formed KKPA and working on to enhance the banks of the river, remove the sludge from the canals, & the lakes and to increase the green cover throughout the city.

With the help and support of the government, private companies, media and the volunteers, we have de-silted 19 kms of water canals plus 400 acres of lakes and planted more than one lakh palm trees. We have been doing all these through the fieldwork on each Sunday morning. So far, we have completed 163 weeks of continuous field works. As, how mothers’ breast milk is important to a baby, Mother nature’s water is important for all forms of life. Due to modernization our water bodies are polluted heavily, and as a polluter we have the responsibility to prevent it and revamp them. Though the government is making efforts, nothing is possible without the participation of the public. That's why we have formed KKPA and working on to enhance the banks of the river, remove the sludge from the canals, & the lakes and to increase the green cover throughout the city.

With the help and support of the government, private companies, media and the volunteers, we have de-silted 19 kms of water canals plus 400 acres of lakes and planted more than one lakh palm trees. We have been doing all these through the fieldwork on each Sunday morning. So far, we have completed 196 weeks of continuous field works.

Following are the task we have currently involved in

    1. Creating a biodiversity model at Vellalore lake.
        2. Sowing palm seeds alongside the bunds of water bodies and on the sides of water channel.
            3. Distillation of ponds
                4. Recovery of waterways.
                    5. Maintaining the check-dams
                        6. Setting up green cover and herbal forest around the water bodies.
                            7. Awareness session at schools and colleges
                                8. Plastic cleaning drive at lake area.