Event Details
தீபவொளியில் நொய்யல்..!
கார்த்திகை தீப நன்நாளில் தீப ஒளியேற்றி நமக்கு வாழ்வளித்த அன்னை நொய்யலை
வணங்குவோம்…!
தீபமேற்றிய பின்பு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மாவளி சுற்றுதல் நிகழ்வு நடைபெறும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.
நம் தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்துடன் நமது வாழ்வு ஒன்றிப்போனது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆண் பனை விடும் பூக்களை நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டி கட்டுவர். பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்து இருபுறமும் கட்டுவர்.பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் கட்டுவர். துணிப்பந்தின் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர்.கயிற்றை பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறிக் கொண்டு ஒரு எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல் காட்சியளிக்கும்.
நமது பாரம்பரியமான இந்த விளையாட்டினை நாளை கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பு பேரூர் படித்துறையில் நிகழ்த்திக் காட்ட உள்ளோம். அனைவரும் வாரீர்..!!
இடம்:பேரூர் படித்துறை, பேரூர்
நாள்& நேரம்: 19/11/2021, வெள்ளிக்கிழமை
மாலை 5.00 – 6.00 PM
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
அழைக்க:
8015714790
[email protected]
இதயத்தின் ஈரம் கொண்டு…! புவியின் ஈரம் காப்போம்..!
- Perur Padithurai
- 19-11-2021
- From 5.00 PM
Event Fee
Contact Details
8015714790
