சர்வதேச குடும்ப நாள்

சர்வதேச குடும்ப நாள் (15/5/2020):

ஒரு சமூக அமைப்பு சீராகவும் கட்டுப்பாட்டுடனும் இயங்குகிறதா என எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்??
அது அந்த சமூக அமைப்பினுள் இயங்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்தின் ஒற்றுமையான அமைதியான சூழலை பொறுத்தே அமையும்.
ஆம்..நாங்களும் ஒரு குடும்பம் தான்.. ஆனால் இந்த சமூக அமைப்பின் அமைதி, ஒற்றுமையுடன் சேர்ந்து இந்த சமூகம் தான் வாழ சார்ந்து இருக்கும் சுற்றுச்சூழலின் பல்லுயிர் தன்மையை காக்க ஒன்றுகூடிய குடும்பம்.
ஆம்…நாங்கள் தன்னார்வலர் குடும்பம்..!!
மூன்று வருடங்களுக்கு முன் சிறிய குடும்ப உறுப்பினர்களை கொண்ட இந்த குடும்பம், இன்று பலநூறு பேர்களைக் கொண்ட கூட்டுக்குடும்பமாக, எதையும் முன்னெடுத்து செல்லும் பலநூறு தலைவர்களைக் கொண்ட குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த குடும்பத்தில் குழந்தைகள் உண்டு, இளைஞர்கள் உண்டு, பெரியவர்கள் உண்டு, எல்லாவற்றிற்கும் மேல் நிறைய அன்பும் உண்டு..!!
இணைத்துக்கொள்ளுங்கள்.. தொடர்ந்து பயணிப்போம்..!!
குளம் குலம் காப்போம்..!!
குடும்ப நாள் வாழ்த்துகள்..!!
இப்படிக்கு
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

Leave a Reply

Your email address will not be published.