ஏரிகளும் அதன் அறிவியலும்

ஏரிகளும் அதன் அறிவியலும்;

இன்று ‘தூம்பு’ குறித்து தெரிந்து கொள்வோம்;

பந்தல் மேடை என்ற பெயர் இருப்பினும் இதற்குத் தூம்பு என்பதே பொதுப்பெயர். தூம்பு எனில் ஓட்டை அல்லது துளை என்று பொருள். துளையுள்ள கொடியும், துளையுள்ள யானையின் கையும் தூம்பு எனப்பட்டன. தூம்புக் கை என்பது மருவியே  தும்பிக்கை ஆனது.
சங்ககாலத்தில் தூம்பினை  ‘சுருங்கை’ என்று அழைத்தனர். *நெடுமால் சுருங்கை நடு வழிப் போந்து , கடு மா களிறு அணத்துக் கைவிடு நீர் போலும்* என்பது பரிபாடல்.

 மேலும் சுருங்கை எனும் சொல் மண் அணையப் பொருத்தப்பட்ட நீர்ப்போக்கியைக் குறிப்பதாகும். இது நீர் வெளியேறும் சிறு வழியாகும். 

*பெருங்குள மருங்கில் சிருங்கைச் சிறுவழி  இரும்பெரும் நீத்தம் புகுவது போல* என்கிறது மணிமேகலை.
*மடை அடைத்து தும்பும் செய்வித்தான்* என்பது கல்வெட்டு வழக்கு. பிறை வடிவ ஏரியின் கிண்ணப் பகுதி ஆழமாக இருக்கும். அங்கு திறந்த 

மடை வைப்பது கரைக்கு ஆபத்தாக முடியும். எனவே தொடக்கத்தில் பந்தல் மடையும்,  வளர்ச்சி அடைந்த நிலையில் சுடுமண் குழாயும் தூம்பாக இருந்துள்ளன.
பின்னர் பலகை கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சதுர தூம்பும்,  அதற்கடுத்து சுண்ணாம்பு காரை கொண்டு சுவர் அமைத்தும் மடை உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து பயணிப்போம்..!!

– கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

Ref : நீர் எழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *