இயற்கைக்கான நேரம்..!!
மனிதர்களாகிய நமக்கு உண்ண உணவு, சுவாசிக்க காற்று, அருந்த நீர் என உயிர் வாழ அவசியமானவற்றை இயற்கை நமக்கு பாகுபாடில்லாமல் வழங்கிவருகிறது.
இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது, இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாக, தன் குழந்தையை காக்கும் தாய்போல இயற்கை நம்மை பாதுகாக்கிறது. ஆனால் நாமோ இயற்கையை விட்டு தள்ளி சென்று கொண்டே இருக்கிறோம். சூழல் மாற்றம் நமக்கு சுட்டியும், கொட்டியும் காட்டிய போதும் விலகியே இருக்கிறோம்.
விளைவு.. பல்லுயிர் சங்கிலியின் தொடர் அறுபட்டு சூழல் மாற்றத்தினால் இன்றைய பாதிப்புகளில் சிக்கி தவித்து உள்ளோம்..!!
இன்றைய.. தேவை நம்மில் ஒரு சிறு மாற்றம். நம்மை இயற்கையோடு இணைத்துக் கொள்ள ஒரு சிறு முயற்சி. ஆம் அதுவே போதும், சூழல் எவ்வாறு நம்மை அணைத்துக் கொள்ளும் என்பதை உணர்வீர்கள்..!!
உணர்வோம்.. சுற்றுச்சூழல் காப்போம்..!!
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (5/6/2020) நம் வேண்டுகோளுக்கிணங்க ‘Water man of India’ ஸ்ரீ ராஜேந்திர சிங் அவர்கள் பேசிய விழிப்புணர்வு காணொளி உங்கள் பார்வைக்கு..!!
குளம் குலம் காப்போம் ..!!
நன்றி ..!!
- கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு