இதுவே தன்னார்வம் !!!

இதுவே தன்னார்வம் ..!!

நமது தன்னார்வலர் சிவராம் அய்யாசாமி தனது கிராமத்தில் தான் தினமும் பார்க்கும் பறவைகளின் வகைகளை தொகுத்து நமக்கு கொடுத்துள்ளார். இந்த தகவல் மற்றும் பதிவு நமக்கு அப்பகுதியின் சுற்றுச்சூழல் பற்றி தெரிந்துகொள்ள முக்கியமானதொன்றாகும்.
இவ்வகையான அறிவுசார் தேடலில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. நீங்களும் முயற்சி செய்யலாமே..!!

இதோ அவரது பதிவு

வெள்ளலூர் குளம், 85 வகையான பறவைகளுக்கு அடைக்கலம் தருகிறது என கேள்விப்பட்டவுடன், அவற்றின் மீதான ஆர்வம் எனக்கு அதிகரித்து நம் சுற்றுப்புறங்களில் இருக்கும் பறவைகளை கவனிக்க வைத்தது.. பல பறவைகளின் பெயரே தெரியாமல் இருந்தது. விவசாய நிலங்கள், கிராமப்புற நீர்நிலைகளில் இருக்கும் பறவைகளே ஐம்பதிற்கும் மேல் இருக்கும். இவை ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலுக்கு மிக அவசியம். புழுக்கள், பல்வேறு பூச்சிகள், தாவரங்கள், கம்பு உள்ளிட்ட சிறு தானியங்கள், வெட்டுகிளிகள், மீன்கள், குட்டி தவளைகள், கொசு, ஈக்கள் போன்றவற்றை உண்டு அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை சமன் படுத்துகிறது. நாம் அனைவரும் நம் பகுதியில் சுற்றி வரும் பறவைகளை பற்றி தெரிந்து, அதன் வாழ்வியலை புரிந்து கொண்டு, நம் வருங்கால தலைமுறைக்கும் அவற்றை கொண்டு சேர்க்க வேண்டும்.
இந்த மூன்று மாதங்களாக, எங்கள் ஊர் பகுதியில் நான் பார்த்த பறவைகளின் சிறு பட்டியல்.
இடம்: அரசிபாளையம், கோவை.

  1. நாமக்கோழி – Eurasian Coot
  2. தாழைக்கோழி – Eurasian Moorhen
  3. நீர்க்காகம் – Coorant
  4. முக்குளிப்பான் – Little Grebe
  5. செம்மூக்கு ஆள்காட்டி – Red wattled Lapwing
  6. சிறியநீல மீன்கொத்தி -Common KingFisher
  7. சின்னக் கொக்கு – Little Egret
  8. சிகப்பலகு வெண்நாரை – White Stork
  9. பொரிப்புள்ளி ஆந்தை – Mottled wood owl
  10. புள்ளி ஆந்தை – Spotted owlet
  11. கவுதாரி – Grey Francolin
  12. மயில் – Peacock
  13. மாடப்புறா – Rock Pigeon
  14. காகம் – House Crow
  15. மணிப்புறா – Spotted Dove
  16. செண்பகம் – Greater Coucal
  17. மைனா – Common Myna
  18. தவிட்டுக்குருவி – Yellow Billed Babbler
  19. சிட்டுக்குருவி – House Sparrow
  20. புள்ளிச்சில்லை – Scaly breasted Munia
  21. கல்லுக்குருவி – Pied Bushcat
  22. பனை உழவாரன் – Asian Palm swift
  23. சின்னான்- Red vented Bulbul
  24. சாம்பல் இருவாச்சி – Indian Grey Hornbill
  25. பச்சைக்கிளி – Parakeet
  26. வால் காக்கை – Rufous Treepie
  27. குயில் – Asian Koel
  28. சுடலைக்குயில் – Jacobin Pied Cuckoo
  29. பொன் முதுகு மரங்கொத்தி – Common Flameback
  30. கரிச்சான் – Black Drango
  31. சிறிய பஞ்சுருட்டான் – Green Bea Eater
  32. பனங்காடை – Indian Roller

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *